Monday, 10 August 2015

இலங்கை தேர்தலில் புலம்பெயர் தமிழர் தாக்கம் - செவ்வி

இலங்கையில் போர் முடிந்து ஆறு வருடங்களின் பின்னர் நடக்கும் ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் பல தரப்பட்ட கொள்கைகளை கொண்ட அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.

தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற கொள்கைகளை முன்வைத்து மூன்று தமிழ் கட்சிகள் போட்டியிடுகின்றன.
அதேவேளை தேசியக் கட்சிகள் மற்றும் ஏனைய பல கொள்கைகளை முன்வைக்கும் கட்சிகளும் போட்டியிடுகின்றன.
இதேவேளை, போரினால், இலங்கை தமிழர்களின் கணிசமான அளவினர் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.
இவர்களும் கடந்த காலங்களில் போரின் போதும், ஏனைய அரசியல் நடவடிக்கைகளிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தி வந்திருக்கிறார்கள்.
இந்த தேர்தலில்கூட நேரடியாக இல்லாவிட்டாலும், தமிழ் பிரதேச வாக்களிப்புகளில் இவர்களின் மறைமுகமான தாக்கம் கணிசமாக இருக்கும் என்கிறார் லண்டனை சேர்ந்த பத்திரிகையாளரான த. ஜெயபாலன்.
புலம்பெயர் தமிழர்கள் இந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்தக் கூடிய தாக்கம் குறித்த அவரது செவ்வியை இங்கு கேட்கலாம்.
Loading...