Saturday, 29 August 2015

சர்வதேச காணாமல் போனவர்களின் தினம் நாளை அனுஸ்டிப்பு

news
சர்வதேச காணாமல் போனவர்களின் தினம் நாளை  அனுஸ்டிக்கப்படவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

போர் மற்றும் ஏனைய காரணங்களினால் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டிக் கொள்வதற்கான ஒரு முயற்சியாகவே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.

மேலும் காணாமல் போனவர்களை கண்டறிவதில் சிலவேளை காலதாமதம் ஏற்படலாம் என்பதனாலும் அவர்களின் குடும்பத்தினருக்கு சரியான பதில் ஒன்றை வழங்குவதற்கு முடியாமல் போகும் என்பதனாலும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினரின் தேவைகள் அதிகமாகும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கை கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.

Loading...