Tuesday, 4 August 2015

ஐக்கிய தேசிய முன்னணி மேடையில் சந்திரிக்கா ஏறுவாரா மாட்டாரா?










முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஐக்கிய தேசிய முன்னணியின் பிரசார மேடைகளில் உரையாற்றமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அவருடைய நெருங்கிய அலுவலர் ஒருவரை ஆதாரம் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் போட்டியிடும் அர்ஜூன ரணதுங்கவின் கம்பஹா அலுவலகத்துக்கு நேற்று சந்திரிக்கா சென்றிருந்தார்.இதனையடுத்து அவர், ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் பிரசாரத்தில் பங்கேற்குமாறு மாதுலுவாவே சோபித்த மற்றும் சிவில் சமூகப்பிரதிகள் ஆகியோர் சந்திரிக்காவுக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...