|
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு தேசிய அரசாங்கத்தின் கீழ் திணைக்களத் தலைவர் பதவிகளைப் பெற்றுக் கொடுப்பதில் துமிந்த திசாநாயக முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான துமிந்த திசாநாயக்க இது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகளை நடத்தி வருவதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
இதற்காக முன்னைய மஹிந்த அரசாங்கத்தில் கூட்டுத்தாபனங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருந்தவர்களில் செயற்திறன் மிக்கவர்களின் பட்டியல் ஒன்றையும் அவர் தயாரித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் கூடுதலான அமைச்சுப் பதவிகளை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்டுள்ள நிலையில், திணைக்களங்களின் தலைவர் பதவிகளை அதிகளவில் சுதந்திரக் கட்சிக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது துமிந்த திசாநாயக்க தரப்பின் வாதமாக உள்ளது.
இதற்கிடையே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் அரசியல்வாதிகளுக்கும் திணைக்களத் தலைவர் பதவிகளைப்பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஐ.தே.க மற்றும் சுதந்திரக் கட்சியில் ஒரு தரப்பினர் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
|
Saturday, 29 August 2015
![]() |
சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களுக்கு திணைக்களத் தலைவர் பதவிகள்! துமிந்த திசாநாயக்க! |
Loading...
