Tuesday, 4 August 2015

தேர்தல்கள் ஆணையாளரும், புலனாய்வுப் பிரிவினரும் தம்மை பின் தொடர்ந்து வருகின்றனர்- ரிசாட் பதியூதீன்

தேர்தல்கள் ஆணையாளரும், புலனாய்வுப் பிரிவினரும் தம்மை பின் தொடர்ந்து வருவதாக அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.தேர்தல் திணைக்கள அதிகாரிகள் எனது நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். தேர்தல் ஆரம்பித்தது முதல் நான் கடுமையாக கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளேன்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ராஜபக்ச இரண்டாம் தடவை ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் வடக்கு மக்களுக்கு ஆற்றுவதாக அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இதன் காரணமாகவே நான் மஹிந்தவை விட்டு விலகிச்செல்ல நேரிட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் 100 நாள் திட்டத்தில் வடக்கிற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கைக்கும் சேவையாற்றியுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி இந்த தேர்தலில் 120 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும்.

புதிய அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு எவரும் கிடையாது.இந்த தேர்தலில் சகல இனவாத கொள்கைகள் பிரச்சாரங்கள் நிராகரிக்கப்படும். மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியைத் தழுவ பொதுபல சேனாவும் அதனைச் சுற்றியிருந்த அமைப்புக்களுமே காரணமாகும்.

நானோ இந்த அரசாங்கமோ தமிழ், சிங்கள அல்லது முஸ்லிம் இனவாதத்தை அனுமதிக்காது அதனை ஏற்றுக்கொள்ளாது எனவும், இனவாதம் முழுமையாக நிராகரிக்கப்படுவதாகவும் அமைச்சர் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வுவுனியா தேக்கவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய முன்னணி கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
Loading...