Wednesday, 19 August 2015

இலங்கையில் எவரும் நினைக்காத முறையில் நடைபெற்ற அமைதியான தேர்தலுக்கு பாராட்டுக்கள் பான் கி-மூன் தெரிவிப்பு!


ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி-மூன் புதிய அரசாங்கத்தை நல்லாட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்ளில் மேலும் முன்னேற்றங்களை காண ஊக்கம் அளித்துள்ளார்.

அத்துடன் அவர் கடந்த 17ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற மிகவும் அமைதியான அனைவரும் பங்களிப்பு செய்த பொது தேர்தலிற்காக தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் நடைமுறையை முன்னெடுத்தமைக்காக ஜனாதிபதிக்கும், இலங்கை மக்களின் வாக்களிப்பு உரிமையை உறுதிசெய்வதற்காக முன்னுதாரமான முயற்சிகளை மேற்கொண்ட தேர்தல் ஆணையாளருக்கும் அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.
Loading...