இப் பொதுத் தேர்தலில் அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டம்களில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை பலி கொடுத்து ஹக்கீம் தனது இருப்பிடத்தை மேலும் ஐந்து வருடம்களுக்கு உறுதிப் படுத்திக் கொண்டார் , மேலும் ஹக்கீம் கண்டியில் தோல்வி அடைந்தாலும் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வார் அத்துடன் நல்ல தோர் அமைச்சுப் பதவியும் பெறுவார் . இதுதான் ரணிலுடன் ஹக்கீம் செய்து கொண்ட ஒப்பந்தம்
அம்பாறை மாவட்டத்தில் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் இன்றி தவிப்பர், வேறு வழி யின்றி ஹக்கீமிடம் சரண் அடைவர் .இதுதான் ஹக்கீமின் திட்டம்
அது மட்டும் அல்ல தனக்கு அம்பாறை மாவட்டத்தில் தடங்களாக இருந்த ஜெமீல் மற்றும் ஹரீஸ் அவர்களையும் களை எடுத்துள்ளார் , ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்துள்ளார், அது மட்டுமல்ல இத் தேர்தலோடு தவமும் வலு இழப்பார் .உண்மையில் ஹக்கீம் சாணக்கியத் தலைவர்தான்
ஐந்து வருடங்கள் இவ்வாறு கழியும்,மீண்டும் நாரேன் தக்பீர் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்
ஹக்கீமால் திட்டம் தீட்டப் பட்டு விட்டது , அம்பாறை மாவட்ட மக்களின் ஜானம் சாணக்கியத் தலைவர் ஹக்கீமால் மழுங்கடிக்கப் பட்டும் விட்டது . மக்கள் விழிப்படைய பிந்தி விட்டார்கள்
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா

