நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்தளவு வெற்றி கிடைக்காவிட்டாலும், கிடைக்கப்பெற்ற ஆசனங்களைக் கொண்டு முடிந்தளவு நாட்டிற்கு நன்மை செய்வோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதனைவிடவும் சிறப்பான தேர்தல் முடிவை தாம் எதிர்பார்த்திருந்ததாக, அநுர இதன்போது குறிப்பிட்டார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சகல தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிட்ட மக்கள் விடுதலை முன்னணி, 5 ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.