|
இலங்கை விஜயத்தின்போது நிஷா பிஷ் வால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களுடன் விசேட சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
இன்று காலை வெ ளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நிஷா பிஷ்வால் வெ ளிவிவகார அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அத்துடன் நாளைய தினம் காலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரின் வாசஸ்தலத்தில் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் வெ ளிவிவகாரங்களுக்கான செயலாளரும் யாழ்.தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான நிலைமைகள், சமகால அரசியல் நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்தஅறிக்கை சகல விதமான சாட்சியங்களையும் உள்ளடக்கிய வலுவான அறிக்கையாக அமைந்தள்ளதாகத் தெரியவருகின்றது.
அதேநேரம் இலங்கையில் பொதுத் தேர்தல் இடம்பெற்று பாராளுமன்ற கன்னி அமர்வே இடம்பெறாத நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றவிஜயம் செய்கின்றனர்.கடந்த 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதுல் கேஷாப் தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
Tuesday, 25 August 2015
![]() |
நிஷா பிஷ்வால் இன்று இலங்கைக்கு |
Loading...
