எந்தவொரு அரசியல்வாதியும் 10 ஆண்டுகளுக்கு மேல் பதவிகளில் இருந்தால், மக்களுக்கு வெறுப்புத்தான் வரும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி ஆசையில் இருந்ததால் இவ்வாறான நிலைமையே அவருக்கும் ஏற்பட்டது. அவரை மக்கள் வாக்குகளினால் விரட்டியடித்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.இவ்வாறு அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
உண்மையான நல்லாட்சிக் காரணமாகவே வேட்பாளர்களிடம் கடந்த காலங்களில் காணப்பட்ட மோதலான நிலைமை தற்போது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் களம் தற்போது சூடிப்பிடித்திருந்தாலும் உண்மையான நல்லாட்சியால், இந்த மோதல் நிலைமை ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
காமினி திஸாநாயக்க மன்றத்தினால், ஹட்டன் - டிக்கோயா நகர மண்டபத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நவீன் திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசின் ஊடாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
தேர்தல் நேரத்தில் தற்போது ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சிக்கும் ஒரே சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் வன்முறையான நிலைமையை நிறுத்த முடிந்துள்ளது.
எந்தவொரு அரசியல்வாதியும் 12 ஆண்டுகளுக்கு மேல் பதவிகளில் இருந்தால், மக்களுக்கு வெறுப்புத்தான் வரும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி ஆசையில் இருந்ததால் இவ்வாறான நிலைமையே அவருக்கு ஏற்பட்டது. அவரை மக்கள் வாக்குகளினால் விரட்டியடித்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர் என்றார்
