Tuesday, 25 August 2015

இலங்கையில் ஜனநாயகம், ஊழல் ஒழிப்பில் முன்னேற்றம்: அமெரிக்கா

இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாக, மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா பிஷ்வால் தெரிவித்துள்ளார்.
Image captionசம்பூர் மீள் கட்டுமான நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இரண்டு நாள் விஜயமாக இலங்கை சென்ற அவர், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சரவீர உள்ளிட்ட உயரதிகாரிகளை இன்று காலை சந்தித்து பேசினார்.
அதற்குப் பிறகு, ஊடகங்களிடம் பேசிய அவர், இலங்கை மக்களிடையே, நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறினார்.
மேலும், இலங்கையில் ஜனநாயகத்தில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதோடு, நல்லாட்சிக்கான பாதையிலும் அது பயணித்துக் கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.
அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜான் கெரியுடன் தான் மேற்கொண்ட விஜயத்தைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த விஜயத்திற்குப் பிறகு, இலங்கையில் ஜனநாயத்தில் மட்டுமல்லாது ஊழல் ஒழிப்பிலும் ஒரு முன்னேற்றத்தைக் காண முடிகிறது என்று நிஷா கூறினார்.
திருகோணமலை சம்பூர் மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு, அமெரிக்க ஒரு மில்லியன் டாலர் அளவுக்கு நிதி உதவிசெய்ய முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்
இந்த சந்திப்பில் பேசிய இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையில் போர்க் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க அமைக்கப்படும் உள்நாட்டு விசாரணை அமைப்பின் மூலம் சிறந்த பயன்களை எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவதற்கான ஸ்திரத்தன்மையை இலங்கையில் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Loading...