Tuesday, 4 August 2015

அட்டாளைச்சேனையில் மினி சூறாவளி! பல வீடுகள் சேதம்

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற காற்றுடன் கூடிய மழையினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த பலத்த காற்றினால் அட்டாளைச்சேனையில் பல வீடுகளும், மரங்களும், வாகனங்களும் சேதங்களுக்குள்ளாகியதுடன் சற்று நேரம் அட்டாளைச்சேனை- கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்களும் தடைப்பட்டு காணப்பட்டது.
அத்துடன் பல வீடுகளின் மின்சார வயர்களும், மின்மானிகளும் அறுந்தும், உடைந்தும் காணப்படுவதால் மின்சாரமும் தடைப்பட்டு காணப்படுகின்றது.
addalaichenai_002
addalaichenai_001
addalaichenai_003
addalaichenai_004
addalaichenai_005
Loading...