|
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் அவரது மருமகன் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே உத்தரவிட்டுள்ளார்.
திறைசேரி பிணை முறி தொடர்பான கொடுக்கல் வாங்கலில் 20 பில்லியன் ரூபாவை மோசடி நடந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், பிரதிவாதிகளை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
|
