சீனாவின் கிழக்கு மாகாணமான ஷாண்டொங் மாகாணத்தில் உள்ள இரசாயன ஆலை ஒன்றில் வெடிப்பு ஒன்று நடந்ததாக சீன ஊடகங்கள் கூறியுள்ளன.
ஷிபோ நகருக்கு அருகே அந்த இடத்தில் இருந்து புகை வந்துகொண்டிருப்பதை தொலைக்காட்சி படங்கள் காண்பித்தன.
5 கிலோமீட்டர்கள் தூரம் வரை அந்த வெடிப்பு உணரப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
வெடிப்பை அடுத்து உருவான தீயை அணைக்க தீயணைப்பு படையினர் போராடுகின்றனர்.
பாதிப்பு குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை.
தியான்ஜினில் நச்சு இரசாயனம் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் பெரும் வெடிப்பு ஏற்பட்டு 10 நாட்களின் பின்னர் இது நடந்துள்ளது.
அதில் குறைந்தபட்சம் 120 பேராவது பலியாகினர்.
