Saturday, 8 August 2015

இலங்கை நாடாளுமன்றத்தேர்தல் : கிழக்கு மக்களின் கருத்து

இலங்கையில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றாக வாழும் மாகாணங்களில் முக்கியமானதான கிழக்கு மாகாணத்தில் நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடித்திருக்கிறது.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த மாகாணத்தில் இந்த மூவின மக்களும் தமது இனஞ்சார்ந்த அடிப்படையிலேயே வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முனைவதாக அங்குள்ள பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
அதேவேளை, தமிழ்மக்களை பொறுத்தவரை அங்கு தமது இனப்பிரச்சினைக்கான தீர்வை அடிப்படையாகக் கொண்டு வாக்களிப்பதா அல்லது போரால் பாதிக்கப்பட்ட அங்கு அபிவிருத்திகோரி வாக்களிப்பதா என்ற வாதப் பிரதிவாதங்கள் அவர்கள் மத்தியில் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
அங்குள்ள தேர்தல் களத்தில் மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் ஒலிப்பெட்டகம்.
தயாரித்து வழங்குகிறார் மட்டக்களப்பு செய்தியாளர் உதயகுமார்.
Loading...