Wednesday, 26 August 2015

எமக்கு ஆதரவு நல்குவதற்கு பலர் எதிர்க்கட்சி தரப்பில் உள்ளனர்--கபீர் ஹாஷிம்

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு நல்குவதற்கு எமக்கு பலர் எதிர்க்கட்சி தரப்பில் உள்ளனர்.இருந்தபோதிலும் நாட்டின் நலனை கருத்திற் கொண்டே தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது.

நாட்டிற்கு தேவையான பல்வேறு வேலைத்திட்டங்களை தேசிய அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கவுள்ளோம். இதற்காக நாம் தயார் நிலையில் இருக்கின்றோம். இது தொடர்பில் எமது நிலைப்பாட்டையும் நாம் அறிவித்துவிட்டோம்.

ஆனாலும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இதற்கு இடையூறு விளைக்கும் வகையில் செயற்படுகின்றது. அமைச்சு பதவிகளை பகிர்வதில் குழப்பம் விளைவிக்கின்றனர். 

எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடமிருந்து சாதகமான முடிவு கிடைக்கபெறும். இல்லையேல் தனியாக ஆட்சி அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு சந்தர்ப்பம் உள்ளது.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு சிறந்த வாயப்பு கிடைத்துள்ளது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவும் எமக்கு அவசியமாகும்.

எமக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் 120 ஆசனங்களை பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை கொண்டு செல்வோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
Loading...