
யானையில் உள்ள மரக் கட்சிக் காரர்களுக்கு வாக்களிப்பது உங்களது வாக்குகளைப் பாழும் கிணற்றில் போடுவதுக்குச் சமம் . முஸ்லிம் காங்கிரசின் அடையாளமான மரச் சின்னத்தை தூக்கி மூலையில் எறிந்து விட்டு யானையில் சேர்ந்துள்ளது எதற்காக ?
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் அக் கட்சியில் உள்ளவர்களுக்கே நம்பிக்கை இல்லாது மாற்றான் உதவியை நாடி உள்ளது, குற்றம் உள்ள மனது குறு குறுக்கும் ,இதனால் தன் நம்பிக்கையை இழந்துள்ளது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி. ஏன் மாற்றான் கட்சியில் இணைந்துள்ளது ? தாங்கள் பதவியை இழந்து விடுவோமோ என்ற பயத்தினால்
ஆகையால் மக்கள் வாக்கு அளிக்கும் போது யானைக் கட்சியில் வாக்குக் கேட்கும் யானைக் கட்சி வேட்பாளருக்கே வாக்கு அளிக்கவும் .
சாய்ந்தமருது மக்கள் நலன் விரும்பி -கலீல்