Thursday, 13 August 2015

கவிதா உள்ளங்களை குளிர வைத்த வகவத்தின் 18வது பௌர்ணமி கவியரங்கு


வலம்புரி கவிதா வட்டத்தின் 18வது கவியரங்கு கொழும்பு அல் ஹிக்மா  கல்லூரியில் கடந்த பௌர்ணமி தினத்தன்று இலக்கிய வாதிகளின் ஒன்று கூடலுடன் சிறப்பாக நடந்தது.வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைன்  நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கினார்.செயலாளர்  இளநெஞ்சன் முர்ஷதீன் வரவேற்புரை  நிகழ்த்தினார்.                                                     கடந்த10-  07-  2015ல் இறையடி சேர்ந்த வகவக் கவிஞர் மலைத்தேனீ என்ற பெயரில் கவிதை பாடிய உடத்தலவின்ன அப்துர் ரஹ்மான் நினைவுக் கூரப்பட்டார். சிறந்த மரபுக் கவிஞரான இவர் ஆரம்ப நாட்களில் கோட்டகொட  .ரஹ்மான் என்ற பெயரில் எழுதி புகழ் பெற்றவராவார்.

அண்மையில் நம்மைவிட்டுப் பிரிந்த இந்திய முன்னாள் ஜனாதிபதியும்  சிறந்த கவிஞருமான அப்துல் கலாமும், கவிஞர்களின் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த இசையமைப்பாளர்  எம்.எஸ்.விஸ்வநாதனும் நினைவு கூரப்பட்டனர்.

உலக கவிதைகள் வாரிசையிலே கறுப்பின கவிதைகள் குறித்த தனது பார்வையினை கவிஞர் மேமன்கவி மிகச் சிறப்பாகவும், சுவாரசியமாகவும் வெளிப்படுத்தினார். இனரீதியாக நசுக்கப்பட்ட மக்களிடம் இருந்து இதயத்தை வருடும் சிறப்பான கவிதைகள் வெளிப்பட்டதாகவும், எடுத்துக்காட்டாக. 70 களில்  கவிஞர் ஈழவாணனை ஆசிரியராகவும் மேமன்கவி யை வெளியீட்டாளராகவும் கொண்டு வெளிவந்த அக்னி இதழ் தனது 5வது இதழை கறுப்பின மக்களின் கவிதைச்; சிறப்பிதழாகக் கொண்டு வந்ததைக்  குறிப்பிட்டு, அவ்விதழில் நம்மவர்களால் ; மொழிபெயர்க்கப்பட்ட கறுப்பின மக்களின் கவிதைள் சிலவற்றை வாசித்துக் காட்டினார்.  குறிப்பாக பேராசியர் எம்.. நுஃமான்; அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட கறுப்பின கவிஞர்ளில் முக்கிமான ஒரு கவிஞராக திகழ்ந்த லங்ஸ்டன் ஹியூஸின்; 'கலப்புஎனும்; கவிதையையும்;, மு.கனகராஜனால்; மொழிபெயர்க்கப்பட்ட கறுப்பினப் பெண் கவிஞர்  நிக்கி கியோவானின்  'எனது கவிதை'யும்,  என். சண்முகலிங்கனினால்; மொழிபெயர்க்கப்பட்ட கறுப்பின கவிஞரும் நாடக ஆசிரியருமான நோர்மன் ஜோர்டனின் கறுப்பு போராளி எனும் கவிதையையும் வாசித்துக் காட்டியதோடு, அவ்விதழில் மேலும் பல கவிதைகளை மொழிபெயர்த்த கே.எஸ்.சிவகுமாரனினால்   எழுதப்பட்ட கறுப்பு இலக்கியம் எனும் குறிப்பையும் எடுத்துக் காட்டியதோடு, கறுப்பின மக்களின் வரலாற்றையும், அவர்தம் கலை இலக்கிய வரலாற்றையும் இளம் தலைமுறையினர் தேடிப் படிக்க வேண்டும் என்றார். அக்கவிதைகளை மேமன்கவி உணர்ச்சிபூர்வமாக முன் வைத்தமை சபையை கவர்ந்தது.
கலஹா சங்கர் கைலாஷ் தலைமையேற்று நடத்திய கவியரங்கில், கவிஞர்கள் கிண்ணியா அமீர் அலி, ஈழ கணேஷ், பிரேம்ராஜ், தமிழ்த் தென்றல் அலி அக்பர்சமூகஜோதி எம்..ரபீக்சட்டத்தரணி உஸ்மான் மரிக்கார்வெளிமடை ஜஹாங்கீர், போறுத்தொ ட்டை றிஸ்மி,மிஹிந்தலை . பாரிஸ்எம்..எம்.ஆறுமுகம்சட்டத்தரணி நூருஸ் ஷப்னா நஜ்முல்  ஹுசைன்,கலையழகி வரதராணி,எம்.வஸீர் ஆகியோர் வீச்சான  கவிதைகளால் வகவ மேடையை சுவையாக்கினர்.
கலாபூஷணம் எஸ்..நாகூர்கனி, எம் ஸ்.எம்.ஜின்னா.மணி, தாஜ்மஹான், மதியன்பன் மஜீத், நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், கவிக்கமல் ரஸீம், எம்.இஸட்.எம். சாஹிர், தெல்தொட்ட இஸ்ரா, மதி அழகன்,சனா எம்.யெஹ்யா,சிராஸ்,நூருஸ் ஷிபா, எம். ரிபாஸ் போன்றோர் கலந்து நிகழ்வுகளுக்கு பொலிவு சேர்த்தனர்.


Loading...