தென்னாப்பிரிக்காவில் கடந்த ஆண்டில் கொலை, கொள்ளை, கார் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டில் மட்டும் 18,000 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட ஐந்து சதவீதம் அதிகம்.
உலகிலேயே தென்னாப்பிரிக்காவில்தான் கொலைவிகிதம் அதிகமாகும். இந்த விவகாரத்தில் பல லத்தீன் அமெரிக்க நாடுகளைவிட தென்னாப்பிரிக்கா பின்தங்கியிருக்கிறது.
கார், டிரக் போன்றவை கடத்தப்படுவதும் கடந்த ஆண்டில் பெரும் அளவில் உயர்ந்திருக்கிறது.
குற்றங்களைக் கட்டுப்படுத்துவதை முக்கிய வாக்குறுதியாகக் கொண்டு ஆட்சிக்குவந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசிற்கு இந்தப் புள்ளிவிவரங்கள் ஏமாற்றமளிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
