Monday, 21 September 2015

4.5 கோடி பெறுமதியான போதை மாத்திரை கடத்தல் முறியடிப்பு

mm

ரூ 4.5 கோடி பெறுமதியான போதை மாத்திரைகளுடன் பயணித்த முச்சக்கர வண்டியொன்று விசேட அதிரடிப்படையினரால் இடை மறிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹல்ப்ஸ்டொப் பகுதியில் இடம்பெற்ற இம்முறியடிப்பில் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் மொத்த பெறுமதி 4.5 கோடியெனவும் வ்வொன்றும் 10 ஆயிரம் போதை மாத்திரைகளைக் கொண்ட 07 பெட்டிகளாகப் பொதி செய்யப் பட்டி ருந்தன. சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு 12ஐச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...