Sunday, 13 September 2015

பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகள் ரத்து: லக்ஷ்மன் கிரியெல்ல

பல்கலைக்கழக மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த தலைமைத்துவ பயிற்சிகள் ரத்து செய்யப்படவுள்ளதாக பல்கலைக்கழக மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.

இதனை உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அறிமுகப்படுத்தினார். இதன்போது சில மாணவர்கள் உயிரிழந்த சந்தர்ப்பங்களும் ஏற்பட்டன. இந்தநிலையில் இதற்கு செலவழிக்கும் காலத்தை, சர்வதேச மொழிகளை கற்பதற்கு செலவழிக்கலாம் என்று கண்டியில் வைத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...