ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் மிகப் பெரிய பவளப் பாறை அமைப்பான தி கிரேட் பேரியர் ரீஃப் நட்சத்திர மீன்களால் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்க எளிய, புதிய வழியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தி கிரேட் பேரியர் ரீஃப் பவளப் பாறைகளை நட்சத்திர மீன்கள் உணவாக உட்கொள்கின்றன. ஆகவே அந்த நட்சத்திர மீன்களைக் கொல்வதற்கான வழிமுறைகளை ஆஸ்திரேலியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மரைன் சயின்சஸைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வுசெய்து வந்தனர்.
முடிவில், நாம் வீடுகளில் சாதாரணமாகப் பயன்படுத்தும் புளிகாடியைக் கொண்டு இந்த நட்சத்திர மீன்களைக் கொல்லலாம் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நட்சத்திர மீன்களின் உடல் முழுவதும் தண்ணீர் என்பதால், புளிக்காடியின் அமிலத் தன்மையை அவற்றால் தாங்க முடியாது.
