Saturday, 19 September 2015

அரசாங்கத்தின் பிரதான மூன்று பாதுகாப்பு தரப்பின் புலனாய்வு பிரிவுளை கலைக்க அரசாங்கம் தீர்மானம்?

அரசாங்கத்தின் பிரதான மூன்று பாதுகாப்பு தரப்பின் புலனாய்வு பிரிவுளை கலைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகள் குறித்து பிரதமர் உயர் அதிகாரிகளிடம் அறிக்கை ஒன்றை கோரியிருந்தார்.

இந்த அறிக்கை பிரதமரின் இந்திய விஜயத்தினைத் தொடர்ந்து, பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பிரதமரும் ஜனாதிபதியும் புலனாய்வுப் பிரிவுகளை கலைக்க தீர்மானித்துள்ளனர். கடந்த ஒன்பது ஆண்டுகளாக புலனாய்வுப் பிரிவுகளின் செயற்பாடுகள் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...