|
எதிர்க் கட்சியில் அமர்ந்து கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எவருக்கும் மாவட்டக் குழுத் தலைவர் பதவி வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி இதனை அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ளும் கட்சியின் எந்தவொரு உறுப்பினருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைமைப் பதவி வழங்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துடைய அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன. மாவட்ட அடிப்படையில் வெற்றியீட்டிய கட்சிகளுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைமைப் பதவி வழங்க இணங்கப்பட்டிருந்தது.எனினும் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 29 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு இந்த உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
|
Thursday, 17 September 2015
![]() |
எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வோருக்கு மாவட்ட குழுத் தலைவர் பதவியில்லை-- ஜனாதிபதி |
Loading...
