Monday, 28 September 2015

பிரமிக்க வைக்கும் ஆகாயம்

2015ஆம் ஆண்டின், விண்வெளி தொடர்பாக எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்களை தேர்வுசெய்யும் போட்டிக்கு வந்த சில புகைப்படங்கள் மெய்மறக்க வைத்தன.
Insight Astronomy Photographer of the Year என்ற பெயரில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
Image captionநார்வேயின் ஸ்கன்லாண்டில் இருக்கும் லொமாஸ் நதி. புகைப்படத்தை எடுத்தவர் Arild Heitmann.
க்ரீனிச்சில் இருக்கும் ராயல் ஆப்சர்வேட்டரியின் சிறந்த புகைப்படங்களைத் தேர்வுசெய்யும் பணி நடந்தது.
Image captionபாவ்லோ போர்செல்லனா என்பவர் எடுத்த இந்தப் படத்திற்கு Our Sun என்ற பிரிவில் விருது கிடைத்தது.
Image captionஒளியின் நதி என்று பெயர் சூட்டப்பட்ட இந்தப் படம் எடுக்கப்பட்டது ஃப்ரான்சில் உள்ள ஹாட் என்ற இடத்தில். படத்தை எடுத்தவர் மார்ட்டின் காம்பெல்.
Image captionஅபிஷ்கோ தேசியப் பூங்கா, ஸ்வீடன். புகைப்படத்தை எடுத்தவர் ஜமென் பெர்சி.
Image captionநார்வேயின் சோர் - ட்ரோன்டெலாக் என்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். படத்தை எடுத்தவர் கோல்பெய்ன் ஸ்வென்ஸ்ஸோன்.
Image captionநிலவுக்கு அருகில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம். படத்தை எடுத்தவர் டேனியல் ஃபெர்ணாண்டஸ் காக்ஸெட்.
Image captionஇதயத்தைத் துளைக்காத அம்பு - பின்னணியில் பால்வெளித் திரளும் ஆஸ்ட்ராய்டுகளும் தெரிய, முன்னேறிச் செல்கிறது வால் நட்சத்திரம்.
Image captionதி ஆண்டெனா கேலக்ஸி. புகைப்படம் எடுத்தவர் ரால்ஃப் ஆல்ஸன்.
Image captionஎம்22 கோர் என்ற இந்த அண்டவெளியின் புகைப்படத்தை எடுத்தவர் மிச்செல் வான் தூர்ன்.
Image captionநார்வேயின் நோர்ட்லாண்டில் இந்தப்படத்தை எடுத்தவர் டாமி எலியாசென்.
Image captionஹாங்காங்கில் உள்ள லன்டாவ் தீவில் சூரியன் மறையும் நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். எடுத்தவர் சாப் ஹிம் வோங்.
Image captionஒரு விண்வெளிப் பயணி: இந்தப் படத்தை எடுத்த ஜார்ஜ் மார்ட்டினுக்கு வயது 15.
Image captionவட அட்லாண்டிக் பெருங்கடலின் மீது முழு சூரிய கிரகணம். ஃபிலிப் ரோலண்ட் என்ற ஏழு வயதுச் சிறுவன் எடுத்த புகைப்படம் இது.
Image captionC/2013 A1 வால்நட்சத்திரமும் செவ்வாய்க் கிரகமும். புகைப்படத்தை எடுத்தவர் செபாஸ்டியன் வோல்ட்மெர்.
Image captionநார்வேயின் சஸெந்தலேனில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்குத்தான் ஒட்டுமொத்தமாக சிறந்த படத்திற்கான விருது வழங்கப்பட்டது. ஒரு வேற்று கிரகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தரும் புகைப்படம் என நடுவர்கள் இதனைக் கருதினர்.
இந்தப் புகைப்படங்களை க்ரீனிச் ராயல் ஆப்சர்வேட்டரியில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை பார்வையிடலாம்.
Loading...