Tuesday, 22 September 2015

ஜனாதிபதி நாளை அமெரிக்காவிற்கு விஜயம்











னாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23ஆம் திகதி அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

அத்துடன், இதன் போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவையும் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் 70வது அமர்வு 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...