Monday, 21 September 2015

வடக்கில் இனப்படுகொலைகள் இடம்பெறவில்லை--வாசுதேவ



இலங்கை இறையாண்மை கொண்ட நாடு. எமக்கென்று நீதித்துறை உள்ளது. எனவே யுத்தக் குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச கலப்பு நீதிமன்ற விசாரணை அவசியமில்லை.யுத்த மோதல்களில் உயிரிழப்புக்கள் என்பது தவிர்க்க முடியாததாகும்.

விடுதலைப் புலிகளில் அதிகமானோர் தமிழர்கள் ஆவார்கள். வடக்கில் வாழ்ந்த மக்களிலும் அதிகமானோர் தமிழர்கள். எனவே இதனை இனப் படுகொலை என அர்த்தப்படுத்த முடியாது. வடக்கில் இனப்படுகொலைகள் இடம்பெறவில்லை. இதனை ஐ.நா. வும் ஏற்றுக்கொண்டுள்ளது

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவும் இனப்படுகொலை என்பதை நிராகரித்துள்ளது. ஆனால் யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் தனிப்பட்ட ரீதியில் ஆட்கள் கடத்தப்பட்டு கொலைகள் இடம்பெற்றிருந்தால் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் படையினர் தொடர்புபட்டிருந்தால் அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தண்டனை வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான. வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
Loading...