|
ஒருபோதும் நாட்டைப் பிரிக்க மாட்டேன்! நாட்டைப் பிரிப்பதற்கு நாம் எதிரானவர்கள் என்று எதிர்கச்சி தலைவர் ஆர் . சம்பந்தன் அவர்கள் பீ.பீ.சி சிங்கள சேவைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனத்தின் பின்னர் பீ.பீ.சி சிங்கள சந்தேஷிய சேவைக்கு அவர் வழங்கியுள்ள பிரத்தியேக பேட்டியில் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் போன்றே தான் செயற்படவிருப்பதாகவும் இரா. சம்பந்தன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
சிங்கள மக்களுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன எனக் கேட்டதற்குப் பதிலளித்துள்ள அவர்:
“சிங்கள மக்களைப் பொறுத்தவரை ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் அனைத்து வேலைகளையும் நான் செய்வேன்.
“ஒருபோதும் நாட்டைப் பிரிக்க மாட்டேன். நாட்டைப் பிரிப்பதற்கு நாம் எதிரானவர்கள். எங்களுக்கு அதில் விருப்பமில்லை. நாட்டைப் பிரிக்கும் கதையே தேவையில்லை. நாட்டைப் பிரிக்கும் கதையை முற்று முழுதாக விட்டுவிடலாம்,” என்று ஐயம் திரிபறத் தெரிவித்திருக்கிறார்.
இந்த அரசிடமிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் தீர்வு என்ன எனக் கேட்கப்பட்டதற்குப் பதிலளித்துள்ள திரு சம்பந்தன்:
“இப்பிரச்சனைக்கு நல்ல தீர்வொன்று கொண்டு வரப்பட வேண்டும். எல்லோரும் ஒன்றாக இருக்ககூடிய தீர்வு எத்தகைய தீர்வாவது கொண்டுவரப்பட வேண்டும்,” என்று தெரிவித்திருக்கிறார்.
|
Friday, 4 September 2015
![]() |
ஒருபோதும் நாட்டைப் பிரிக்க மாட்டேன் - சம்பந்தன் |
Loading...
