மாலத்தீவுகளின் தலைநகருக்கு அருகே வந்துகொண்டிருந்தபோது அந்த நாட்டு அதிபர் அப்துல்லாஹ் யமீனின் படகில் ஏற்பட்ட வெடிப்பில் இருந்து அவர் பாதிப்பின்றி உயிர்தப்பியுள்ளார்.
அவரது மனைவிக்கும் பல அதிகாரிகளுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டன.
ஹஜ் யாத்திரையை அடுத்து சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய அவர், ஒரு தீவில் இருக்கும் விமானநிலையத்தில் இருந்து படகு மூலம் தலைநகர் மாலிக்கு திரும்பிக்கொண்டிருந்தவேளை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் குறித்த விசாரிக்கும் புலனாய்வாளர்கள் சம்பவத்துக்கான காரணம் குறித்து இன்னமும் எதுவும் கூறவில்லை என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் பிபிசிக்கு கூறினார்.
