பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.
ஜனவரி மாதம் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ரக்னா லங்கா நிறுவன ஊழியர்களை தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் சம்பவம் குற்றச்சாட்டிற்கான அறிக்கை சமர்பிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெஸில் டீ சில்வா தெரிவித்துள்ளார் .
இதே வேளை இந்த விடயம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க மேலும் 8 நபர்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்
