ஒரு முழு அமைச்சுப் பதவிக்கும்,இரண்டு அரை அமைச்சுப் பதவிக்கும் ,இரண்டு தேசிய பட்டியலுக்கும் சோரம் போய் , தேசிய ஐக்கிய முன் அணியில் கூட்டுச் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் என்ற தடயம் அழிக்கப் பட்டு விட்டது. மர்ஹும் அஷ்ரப் காலத்தில் தலை நிமிர்ந்து கொடி கட்டிப் பறந்த கட்சி , முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி உலகுக்கே எடுத்து பறை சாற்றிய கட்சி தற்போது ஒரே ஒரு உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுடன் வாய் மூடி மௌனியாய் பேரம் பேசும் சக்தியை இழந்து நிற்க வேண்டிய சூழ் நிலை உருவாகி உள்ளது கண்டு முஸ்லிம் காங்கிரசின் ஆரம்பப் போராளிகள் மிக மன வேதனைப் படுகின்றனர் .
எதிர் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் என்ற நாமம் முற்றாக மறக்கப் பட்டதாகவே இருக்கும்
முஸ்லிம் காங்கிரஸ் முதுமைப் போராளி அப்துல் வஹாப்
