இலங்கையில் சர்வதேச பொறிமுறை ஒன்றின் ஊடகவே போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் பிரேரணை முன் மொழியப்பட்டுள்ளது.சபையினில் முதலாவது பிரேரணையாக இணஅழிப்பிற்கு சர்வதேச விசாரணை பொறிமுறை தொடர்பாக குறிப்பிட்டு தனது தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்தார்.அதனை கே.சிவாஜிலிங்கம் ஆமோதித்திருந்தார்.
முதலமைச்சர் தனது பிரேரணையினில் ஏற்கனவே வடமாகாணசபையினில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக பிரஸ்தாபித்ததுடன் சர்வதேச நீதிமன்றினில் இலங்கையை முன்னிறுத்த முடியாதுள்ளமை பற்றியும் பிரஸ்தாபித்தார்.
குறிப்பாக றோம் உடன்படிக்கையினில் இலங்கை கைச்சாத்திடாதுள்ளமை பற்றி சுட்டிக்காட்டிய முதலமைச்சர் கடந்த கால அனுபவங்கள் பிரகாரம் உள்ளக விசாரணை தீர்வேதெனையும் தராதென்பதால் சர்வதேச விசாரணையே தேவையென முதலமைச்சர் முன்மொழிந்திருந்தார்.
