முன்னாள் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தாவும் ஆறுமுகன் தொண்டமானும் தேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபாலவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் விருப்பம் வெளியிட்டுள்ளனர்
எனினும் இருவருக்கும் அமைச்சுப்பதவிகள் வழங்கப்படுமா? என்பது குறித்து ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் எவ்வித உறுதிப்பாடுகளையும் வழங்கவில்லை என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தமக்கு பெருந்தோட்டத்துறை சார்ந்த அமைச்சு இல்லையேல் அமைச்சுப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் எதிர்க்கட்சியாகியுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் எதிர்ப்பு இருக்கப்போவதில்லை என்ற அடிப்படையில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பெரும்பாலும் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற அனுமதியின்படி இன்னும் இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதால் அதில் ஒருவர் டக்ளஸாகவும் மற்றும் ஒருவர் சரத் அனுமுகமவாகவும் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
|
Thursday, 10 September 2015
![]() |
ஆறுமுகன் தொண்டமான் வெளியே! டக்ளஸ் தேவானந்தா உள்ளே |
Loading...
27.09.2015 - Comments Disabled
24.10.2015 - Comments Disabled
14.11.2015 - Comments Disabled
14.07.2015 - Comments Disabled
20.07.2015 - Comments Disabled