|
"பகத்சிங்கின் 108 வது பிறந்த நாள்"
பகத்சிங் என்றால் வீரத்தின்,விவேகத்தின்,தியாகத்தின் மொத்தத்தில் ஆளுமையின் அடையாளம்.இன்று அடையாளமோ,வரலாறோ இல்லாதவர்கள் புரட்சி என்றும் தளபதி என்றும் தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொள்வதும், பிறரை சூட்ட சொல்வதும் அரசியலில் வாடிக்கையாகிவிட்டது."
இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் சிறைவாசம் என்று சொல்லக்கூடிய கொடிய சட்டமான "ரௌளட்சட்டத்தை" எதிர்த்து 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 அன்று(பைசாகிப்பண்டிகை)முன்னிட்டு அமிர்தசரசில் உள்ள ஜாலியன் வாலிபால் மைதானத்தில் குண்டுகள் தீரும் வரை சுட்டேன்,சுட்டேன் என கொக்கரித்த ஜெனரல் டையர் ,மைக்கேல்டையர்,லாட்ஷெட்லன்ட் ஆகிய மூவரும் நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்தனர்.இந்த சம்பவத்தை கேள்விபட்ட 12 வயது மாணவன் இதற்கு காரணமான வெள்ளை ஏகாதிபத்தியத்தை இந்த நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என உறுதிப்பூண்டான்."
ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற அந்த போராட்ட மண்ணை வீட்டில் வைத்து வணங்கி இதற்கு எதிராய் தன்னை தயார்படுத்திக்கொண்டான்.பாரத்மாதா சங்கம் துவங்கி கால்கரி சதிவழக்கும்,சாண்டர்சன் கொலைவழக்கையும் துச்சம் என கருதி தலைமை தாங்கினான். 1928 ஆம் ஆண்டு. வெள்ளை பரங்கியர் அரசு தொழிளாளர்களை கொன்று குவிக்கும் கூடிய தொழிற்தகறாறு மசோதாவை இரத்து செய்ய வேண்டும் என போராட்டங்களில் ஈடுபட்டனர் ."
இன்று எப்படி நரேந்திரமோடி மோடி அரசு பன்னாட்டு முதலாளிகளின் ஆதரவோடு நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை கொண்டுவர நினைத்ததோ,தொழிலாளிகள சுரண்டுவதற்கு ஏதுவாக தொழிற்தகறாறு மசோதாவை மாற்றத்துடிக்கிறதோ அதே போன்றுதான் அன்று பிரிட்டிஷ் அரசு தொழிற்தகறாறு மசோதாவை கொண்டு வந்தது.இதற்கு எதிராக எந்தவித சேதாரத்தையும் உண்டுபன்னாத வெறும் சத்தமும்,புகையை மட்டும் கிளப்பும் டம்மி வெடிகுண்டை பகத்சிங்கும் - பட்கேஷ்வர்தத்தும் பாராளுமன்றத்தில் குண்டு போட்டதோடு இல்லாமல் தொழிற்தகறாறு மசோதவிற்கு எதிராகவும்,வெள்ளை ஏகாதிபத்தியம் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கோஷம்போட்டு துண்டுஅறிக்கைகளை வீசி எறிந்து கைதாகினாரகள்."
இத்தேசத்தின் விடுதலைக்காய் 23 வயதில் 1931 ஆம் ஆண்டு தூக்கு மேடையில் முகத்தை கருப்புத்துனி போட்டு மூடிக்கொள்ளாமல் சிறித்த முகத்தோடு "இன்குலாப் ஜிந்தாபாத்" என்ற வீர முழக்கத்துடன் தங்களின் உயிரை இந்த நாட்டின் விடுதலைக்காய் துறந்தனர்."
அதற்கு முன்னாள் உனது கடைசி ஆசை என்னவென்று கேட்டதற்கு " பாலுக்கு அழாத குழந்தை கல்விக்கு ஏங்காத மாணவன் வேலைக்கு அலையாத இளைஞன்" இவர்கள் இல்லாத தேசத்தை உறுவாக்க நான் எத்தனை முறை வேண்டுமானாலும் சாகத்தயார் என்ற மகத்தான வீரனின் 108 வது பிறந்தநாள் 28 செப்டம்பர் 1907 ஆம் ஆண்டு.
|
Friday, 11 September 2015
![]() |
"உலகின் அனைத்து வரலாறும் யுவ,யுவதிகளின் இரத்தத்தால் எழுதப்பட்டது" - என்றான் மாவீரன் பகத்சிங். |
Loading...
