Wednesday, 7 October 2015

நடப்பு நிதியாண்டுக்கான நிதியில் 19 சதவீதமே இதுவரையும் செலவு

நடப்பு நிதியாண்டுக்கான நிதியில் 19 சதவீதமே இதுவரையும் செலவு
நடப்பு நிதியாண்டுக்கான நிதியில் 19 சதவீதமே இதுவரையும் செலவு
வடக்கு மாகாண சபையால் நடப்பு நிதியாண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 19%மான நிதியே கடந்த ஓகஸ்ட் மாத இறுதி வரையில் செலவு செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையால் 2015 ஆம் ஆண்டுக்குரிய வரவு -செலவுத் திட்டத்தில், மாகாண விசேட அபிவிருத்தி நன்கொடையாக ஆயிரத்து 440 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அதில் 337 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 268 மில்லியன் ரூபாவே செலவு செய்யப்பட்டுள்ளது. 
குறித்தொதுக்கப்பட்ட நன்கொடையாக 400 மில்லியன் ரூபா வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டது. அதில் 85 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 53 மில்லியன் ரூபாவே செலவு செய்யப்பட்டுள்ளது. மாகாண விசேட அபிவிருத்தி நன்கொடையாக ஒதுக்கப்பட்ட ஆயிரத்து 400 மில்லியனில், முதலமைச்சர், அமைச்சு மற்றும் அதன் கீழான திணைக்களங்களுக்கு 216 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் 6 மில்லியன் மாத்திரமே செலவு செய்யப்பட்டுள்ளது. பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்ட 168 மில்லி யன் ரூபா செலவு செய்யப்பட வில்லை. 
விவசாய அமைச்சு மற்றும் அதன் கீழான திணைக்களங்களுக்கு 173 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 48 மில்லியன் ரூபா மாத்திரமே செலவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு மற்றும் அதன் கீழான திணைக்களங்களுக்கு 303 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 14 மில்லியன் ரூபா மாத்திரமே செலவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு மற்றும் அதன் கீழான திணைக்களங்களுக்கு 367 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில்- 72 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. மீன்பிடி அமைச்சு மற்றும் அதன் கீழான திணைக்களங்களுக்கு 213 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் - 126 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை- 2013 ஆம் ஆண்டு சமர்ப்பித்த 2014 ஆம் ஆண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டத்தின் வேலைத்திட்டங்கள் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதமே முடிவுக்கு வந்திருந்தது. இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்குரிய வேலைத் திட்டங்கள் இன்னமும் 25 சதவீதம் கூட பூர்த்தியாகத நிலையில் உள்ளது. வருடம் முடிவடைவதற்கு இன்னமும் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், நடப்பு ஆண்டு வேலைத் திட்டங்களும் அடுத்த ஆண்டிலேயே நிறைவடையக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.      
Loading...