Thursday, 29 October 2015

வடக்கு - கிழக்கில் 65,000 வீடுகள் அமைக்க அமைச்சரவை அனுமதி

வடக்கு - கிழக்கில் 65,000 வீடுகள் அமைக்க அமைச்சரவை அனுமதி
வடக்கு - கிழக்கில் 65,000 வீடுகள் அமைக்க அமைச்சரவை அனுமதி
மீள்குடியேற்ற - புனர்வாழ்வு அமைச்சினால் வடக்கு - கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, இது தொடர்பிலான நடவடிக்கைகள் உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மீள்குடியேற்ற - புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால், வடக்கு - கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் நிர்மாணிப்பதற்கு அனுமதி கோரி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த வீடுகள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை இலக்காகக் கொண்டே அவர்களுக்கு நிர்மாணித்து வழங்கும் நோக்கில் அமைக்கப்படவுள்ளன. 
இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்குக் கேள்வி கோரல் மூலம் பொருத்தமான நிறுவனங்கள் தேர்வு செய்யப்படவுள்ளன. இவ்வாறு தெரிவு செய்யப்படும் நிறுவனங்கள், வீடுகள் அமைப்பதற்கான நிதியையும் வங்கிகளிடமிருந்து இலங்கைக்கான கடனாகக் கொண்டு வரவேண்டும். குறித்த கடன் தொகையை இலங்கை அரசு செலுத்தும். அவ்வாறு நிதியைக் கொண்டு வரும் நிறுவனங்களே நிர்மாணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும். 
மேலும், மிகக் குறுகிய காலத்தில் வீடுகளை நிர்மாணித்து தருவதற்கு இணங்கும் நிறுவனங்களே தேர்வு செய்யப்பட்டு வீடமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும். விண்ணப்பம் கோரல் நடவடிக்கைகள் இன்னும் இரண்டு மாத காலத்தினுள் முடிவுறுத்தப்படும் என்றும், பெரும்பாலும் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாத இறுதியில் வீடமைப்பு நிர்மாண நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்றும், அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
Loading...