இஸ்ரேலியர்கள் மீது நடத்தப்பட்ட இரண்டு கத்திக் குத்துச் சம்பவங்களை அடுத்து, பழைய ஜெருசலேம் நகரப் பகுதிக்குள் பாலஸ்தீனியர்கள் செல்லமுடியாதபடி இஸ்ரேல் தடை விதித்துள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் இரண்டு நாட்களுக்கு அமலில் இருக்கும். அங்கு குடியிருக்காத பாலஸ்தீனியர்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை.
நேற்று சனிக்கிழமை இரவு, பாலஸ்தீனியர் ஒருவரின் கத்திக் குத்திற்கு இலக்காகி இஸ்ரேலியர்கள் இரண்டு பேர் பலியாகினர்.
இந்தச் சம்பவம் நடந்து சில மணி நேரத்தில் இன்னொரு பாலஸ்தீனியர், இஸ்ரேலிய பதின்மவயது நபரை கத்தியால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
கத்திக்குத்தில் ஈடுபட்ட இரண்டு பேரையும் காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
அப்பகுதியில் தீவிரமடைந்துவரும் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருடனும் யூத குடியிருப்பாளர்களுடனும் நடந்த மோதல்களில் கடந்த 24 மணிநேரத்தில் 70 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது
