எந்த தாவர எண்ணெயிலும் கொலஸ்ரோல் இல்லை. ஆனால் அதிக எண்ணெய் உணவுகளை உண்ணும்போது அவை உடலில் கொலஸ்ட்ரோலாக மாறுகிறது. எல்லா மாமிச உணவுகளிலும் இருக்கிறது. முட்டையில் அதிகம் இருக்கிறது இறால், கணவாய் ஆகியவற்றில் அதிகம் இருக்கிறது.
மிருகங்களின் ஈரல், மூளை, சிறுநீரகம் போன்றவற்றலும் அதிகம் உண்டு. பாலிலும் இருக்கிறது. உண்மையில் ஒவ்வொரு முட்டையிலும் 300 மிகி கொலஸ்ட்ரால் இருக்கிறது. எமது உடலுக்கான தினசரி கொலஸ்ரோல் தேவை அதே 300 மிகி மாத்திரமே. ஆனால் இருதய நோயுள்ளவர்களுக்கு 300 மிகிக்கு மேற்படக் கூடாது.
முட்டையில் கொலஸ்ட்ரோல் அதிகமாக இருப்பதால்தான் பலரும் முட்டை சாப்பிடத் தயங்குகிறார்கள்.
ஆனால் குருதிக் கொலஸ்ட்ரோல் அதிகரிப்பதற்கு உணவில் உள்ள கொலஸ்ட்ரோல் முக்கிய காரணமல்ல. எமது உடலே தனக்குத் தேவையானதை உற்பத்தி செய்து கொள்கிறது.
ஆரோக்கியமற்ற கொழுப்பு அதிகமுள்ள உணவு முறைகளும், உடற்பயிற்சி இன்மையும், பரம்பரையில் கொலஸ்ட்ரோல் இருப்பதும் ஒருவரது குருதி கொலஸ்ட்ராலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கொலஸ்ட்ரோல் மற்றும் இருதய நோய் பிரச்சனை இல்லாதவர்கள் தினமும் ஒவ்வொரு முட்டை உண்பதில் தவறில்லை.
ஆனால் அத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் வாரத்திற்கு முன்று முட்டைகள் உட்கொள்வதில் பிரச்சனை இல்லை. ஆனால் முட்டையை எவ்வாறு உண்பது என்பதும் முக்கியம். தினமும் முட்டையை பொரித்துச் சாப்பிட்டால் எண்ணெய் காரணமாக கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். அவித்து உண்பதே நல்லது.