|
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் நிராகரிக்கப்பட்ட கருணா ஐக்கிய தேசிய கட்சியிடம் சரணடையவிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.தமக்கு கிடைக்க வேண்டிய தேசிய பட்டியல் ஆசனத்தை சுசில் பிரேமஜெயந்தவும், பசில் ராஜபக்ஷவுமே தட்டிக் கழித்ததாக அவர் கூறியுள்ளார்.
எனினும் தாம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்றவிருப்பதாகவும் இது தொடர்பில் தாம் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் கூறினார். அதேநேரம்இ பிரதமர் ரணிலுக்கும் தமக்கு சிறந்த உறவு இருப்பதாகவும் இந்த நிலையில் தாம் அவருடன் இணைந்தும் பணியாற்ற முயற்சிப்பதாகவும் கருணா தெரிவித்துள்ளார்.
எவ்வாறான சூழ்நிலையிலும் தாம் அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்
|
Monday, 12 October 2015
![]() |
ஜனாதிபதி சிறிசேனவுடன் இணைந்து பணியாற்றவிரும்பும் கருணா |
Loading...
