இஸ்ரேலிலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியிலும் பல கத்திக்குத்து தாக்குதல்கள் நடந்துள்ளன.
அப்பகுதியில் அண்மைய வாரங்களில் நடந்துள்ள கத்திக்குத்து தாக்குதல்களின் தொடர்ச்சியாக இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.
தெற்கு இஸ்ரேலிய நகரான டிமோனாவில், அராபியர்கள் நால்வரை கத்தியால் குத்திய யூதர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
கத்திக்குத்துக்கு உள்ளானவர்களில் இரண்டு பேர் சிறுபான்மை நாடோடி அராபியர்களான பதாவிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இரண்டு பேரும் பாலஸ்தீனர்கள்.
தாக்குதலை நடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நகர மேயர் கூறியுள்ளார்.
மேற்குக் கரையில் கிர்யாட் அர்பா என்ற இடத்தில் உள்ள யூதக் குடியேற்றப் பகுதியின் நுழைவாயிலில் பொலிஸ்காரர் ஒருவரை கத்தியால் குத்திய பாலஸ்தீனர் ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளதாகவும் காவல்துறை கூறுகின்றது.
முன்னதாக, மத்திய ஜெருசலேத்தில் இஸ்ரேலிய பதின்ம வயது நபர் ஒருவரைக் கத்தியால் குத்தி சிறுகாயத்துக்கு உள்ளாக்கிய பாலஸ்தீனர் ஒருவர் தப்பிச்சென்றுவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
