Thursday, 22 October 2015

தமிழ் மக்களின் அபிலாசைகளை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்: வீ.சதாசிவம்













தமிழ் மக்களின் அபிலாஸைகளை புதிய அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் சதாசிவம் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் புதிய தலைவர்களை தெரிவு செய்வதற்கான கடந்த தேர்தல்களில் வடக்கு கிழக்கு மக்கள் அளித்த ஒத்துழைப்பை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடிந்த போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். தமிழ் மக்களின் கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்படுவதனை தடுக்க வேண்டும்.

ட்டக்களப்பபில் 1400க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலை வாய்ப்புக்கள் இன்றி அல்லலுறுகின்றனர் என அவர் நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.
Loading...