அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அறிவித்த போதிலும் தங்களுக்கு தேவையான நிவாரணங்களையே பெற்றுக்கொண்டுள்ளது என வடமத்திய மாகாண ஜே.வி.பி உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன. மதுபானம் சிகரட் வகைகளுக்கான விலை உயர்வினை அரசாங்கம் நியாயப்படுத்தி வருகின்றது.
குடிப்பவர்கள் எப்படியும் குடிப்பார்கள். அதன் பாதிப்பும் சமையலறைக்கே ஏற்படும்.
வாகனங்களை இறக்குமதி செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்துவதாக அறிவித்த அரசாங்கம் வாகனங்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.
மக்களிடமிருந்து கொள்ளையிட்டு வெளிநாடுகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை எவ்வித கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் ஊடாக அரசாங்கத்தில் உள்ள கள்வர்களும் கடந்த அரசாங்கத்தைச் சேர்ந்த கள்வர்களும் தப்பித்துக் கொள்வதே நடக்கும்.
கள்வர்களும் கள்வர்களும் இணைந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நிலைமையே ஏற்பட்டுள்ளது என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
|
Wednesday, 7 October 2015
![]() |
அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை! வசந்த பண்டார குற்றச்சாட்டு |
Loading...
28.06.2015 - Comments Disabled
14.08.2015 - Comments Disabled
08.06.2015 - Comments Disabled
04.11.2015 - Comments Disabled
21.02.2017 - Comments Disabled