Monday, 5 October 2015

பிரதமர் ரணில், ஜப்பான் வாழ் இலங்கையர்களை இன்று சந்திக்கிறார்











ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று திங்கட்கிழமை ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் அங்கு வாழ்கின்ற இலங்கையர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.

பின்னர் இன்று மாலை ஜப்பானிய வர்த்தக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட உள்ள மாநாடு ஒன்றில் உரையாற்றவுள்ளார்.

ஜப்பானின் முன்னணி பத்திரிகையான அபாசி சின்புன்கிற்கு விசேட நேர்காணல் ஒன்றையும் இன்று வழங்கவுள்ளார்.

நாளைய தினம் ஜப்பானிய நாடாளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

அண்மையில் ஜப்பான் நாடாளுமன்றில் உரையாற்றும் மூன்றாவது அரச தலைவர் ரணில் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திரே மோடி ஆகியோர் உரையாற்றியுள்ளனர்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவைத் தொடர்ந்து, இலங்கை அரச தலைவர் ஒருவர் ஜப்பான் நாடாளுமன்றில் உரையாற்றும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Loading...