|
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் அரசியல் வாரிசாக இவரின் மகள் கிரிசாந்தி இறக்கப்படுகின்றார் என்று யாழ்ப்பாணச் செய்திகள் கூறுகின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியில் சம்பந்தரின் மகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட உள்ளது என்று செய்திகளில் கூறப்படுகின்றது.
எதிர்க் கட்சித் தலைவர் பதவியை பெற்றுக் கொண்ட பிற்பாடு முதல் தடவையாக சம்பந்தர் யாழ்ப்பாணம் வந்து உள்ளார். கூடவே மனைவி, மகள் ஆகியோரையும் கூட்டி வந்து உள்ளார்.
இவர் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை பெற்றமையை யாழ்ப்பாணத்திலும் பல இடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விழா எடுத்துக் கொண்டாடுகின்றது.
இவ்விழாக்களில் மகள் கிரிசாந்தியை இவர் மிக நுட்பமான முறையில் முன்னிலைப்படுத்துகின்றார் என்று அவதானிக்கப்பட்டு உள்ளது.
|
Sunday, 4 October 2015
![]() |
சம்பந்தரின் அரசியல் வாரிசாக மகள் கிரிசாந்தி அறிமுகம்! |
Loading...
