Friday, 16 October 2015

சிறையில் துணைக்கு ஆள் கேட்ட வெலே சுதா








மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் வெலே சுதா அடைக்கப் பட்டிருக்கும் சிறைப்பகுதி தனிமைப் படுத்தப்பட்டு , தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தன்னால் அங்கு தனியாக இருக்க முடியாது எனவும் குறைந்தது மேலும் இருவரையாவது அங்கு சேர்க்க வேண்டும் எனவும் சிறைச்சாலை அதிகாரியுடன் வெலே சுதா கோரிக்கை முன் வைத்துள்ளார்.

எனினும், அக் கோரிக்கையை தாம் நிராகரித்து விட்டதாக சிறைச்சாலை அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெறும் 70 வீதமான போதைப்பொருள் வர்த்தகத்திற்கு வெலே சுதாவே காரணம் என தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும் 7 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச் சாட்டிலேயே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையும் மேன் முறையீட்டுக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...