பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு, ஸ்காட்லாந்தில் பிறந்த பொருளியல் வல்லுநர் , ஆங்கஸ் டீட்டனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நுகர்வு, வறுமை மற்றும் சமூக நலம் ஆகியவைகள் குறித்து அவர் செய்த ஆய்வுப்பணிகளுக்காக, நோபல் கமிட்டி இந்த விருதை அவருக்குத் தந்துள்ளது.
பேராசிரியர் டீட்டன் அமெரிக்க பிரிட்டிஷ் இரட்டைக் குடியுரிமை பெற்றவர். அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்.
நுகர்வோர் மேற்கொள்ளும் தனிப்பட்ட தேர்வுகளைப் பற்றிய ஒரு மேம்பட்ட புரிதலை அவரது ஆய்வுகள் தந்துள்ளன என்று நோபல் கமிட்டி கூறியது.
இது சமூக நலத்தை மேம்படுத்தும் மற்றும் வறுமையைக் குறைக்கும் பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்க உதவும் என்று அது கூறியது.
தனக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து தான் பெருமகிழ்ச்சி அடைவதாகக் கூறிய பேராசிரியர் டீட்டன் வறுமை குறித்த தனது ஆய்வுப் பணிகளை நோபல் கமிட்டி அங்கீகரித்துள்ளதற்காக தான் மிகவும் திருப்தி அடைவதாகக் கூறியிருக்கிறார்.
