Thursday, 15 October 2015

பிரதமர் ரணில் சிங்கப்பூருக்கு விஜயம்











பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று பிரதமர் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

பிரதமருடன், சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் இணைந்து கொள்கிறார்.

சிங்கப்பூர் பிரதமர் மற்றும் அந்நாட்டு முக்கியஸ்தர்களுடன் பிரதமர் ரணில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இலங்கையில் முன்னெடுக்கப்பட உள்ள பாரியளவிலான அபிவிருத் திட்டங்களுக்கு சிங்கப்பூரின் உதவிகளையும், நன்கொடைகளையும் பெற்றுக்கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார மாற்றங்களில் சிங்கப்பூர் முதலீட்டாளர்களையும் உள்ளீர்த்துக் கொள்ள முயற்சிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Loading...