Saturday, 3 October 2015

ஜப்பான் நோக்கி புறப்பட்டார்.பிரதமர் ரணில் விக்ரமசிங்க

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை ஜப்பான் நோக்கி சென்றுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் 8 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு வொன்றும் ஜப்பான் நோக்கி சென்றுள்ளது.

பிரதமரின் ஜப்பான உத்தியோக பூர்வ விஜயம் நாளை முதல் 7ம் திகதி வரை இடம் பெறவுள்ளது.

அக் காலப் பகுதியினுள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின் சோ அபேவுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு நாட்டுக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை மேலும் வளர்க்கும் நோக்கில் இக் கலந்துரையாடல் இடம் பெறவுள்ளது.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

இதற்கு முன்னர் பிரதமர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...