|
கலப்பு அரசாங்கம் கள்வர்களை பாதுகாத்து வருவதாக ஜே.வி.பி கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்ததெரிவித்துள்ளார்.
மஹிந்த தலைமையிலான கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவே தேசிய அரசாங்கத்தை கட்டுப்படுத்தி வருவதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அதிகாரங்கள் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கலப்பு அரசாங்கம் நீதியை நிலைநாட்டும் என எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நிதிக் குற்றவியல்விசாரணைப் பிரிவினர் உரிய முறையில் விசாரணை நடத்திநடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், காவல்துறை மா அதிபரோ அல்லது சட்ட மா அதிபரே உரிய முறையில் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் வரியின் ஊடாக மட்டுமே வருமானம் ஈட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு போத்தல் மதுபானத்தின் விலை 1060 ரூபா எனவும், இதில் 888 ரூபா வரியாக அறவீடு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் மதுபானத்தை அருந்துகின்றார்களா அல்லது வரியை அருந்துகின்றார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
Sunday, 11 October 2015
![]() |
கலப்பு அரசாங்கம், கள்வர்களை பாதுகாக்கின்றது |
Loading...
