1. பேதை:-
பேதை என்றால் மகளிர்பருவம் “ஏழனுள் ஐந்து வயதுமுதல் ஏழு வயதுவரையுள்ள பருவத்துப் பெண்” என்றார்கள் ., ஆனால் கலகலவென சிரிக்கும்போது அவளுக்கு வயது ஒரு எண் மட்டும் தான் ..
2. பெதும்பை
பெதும்பை என்றால் மகளிர்பருவம் ” எட்டு முதல் பதினொரு வயதுவரையுள்ள பெண்”.என்றார்கள் ., ஆனால் இன்றும் அந்த சிறு பிள்ளைத்தனமாய் பழகுகிறாள் ..
3.மங்கை:-
மங்கை என்றால் மகளிர்பருவம் “12 முதல் 13 வயது வரை உள்ள பெண். “மொய்கொண்ட மங்கை யிடங்கடவா மாண்பினாள் ” என்றார்கள் ..இன்றும் அந்த சகோதரனை விரட்டும் சிறு பிள்ளையாக இருக்கிறாள் ..
4.மடந்தை:-
மடந்தை என்றால் மகளிர்பருவம் ” மகளிர்பருவம் ஏழனுள் பதினான்குமுதல் பத்தொன்பது வயதுவரை யுள்ள பருவத்துப் பெண்”. ஆம் அந்த கன்னத்து மச்சம் எந்த வயதிலும் இந்த பருவத்தை நினைவு கூர்கிறது ..
5.அரிவை:-
அரிவை என்றால் மகளிர்பருவம் ” இருபது வயதுமுதல் இருபத்தைந்து வயதிற்குட்பட்ட பெண்” .ஆம் அந்த படிப்பு மற்றும் வேலையின் சுறுசுறுப்பு என்றும் இவளிடம் உள்ளது ..
6.தெரிவை:-
தெரிவை என்றால் மகளிர்பருவம் “25 வயது முதல் 31 வயதுக்குட்பட்ட பெண்” .ஆம் இன்றும் ஒரு வேலையை எடுத்தால் முடிப்பேன் என்று என்றும் வேகமாக இருக்கிறாள் ..
7.பேரிளம்பெண்:-
பேரிளம்பெண் என்றால் மகளிர்பருவம் “எழுவகைப் பருவமகளிருள் முப்பத்திரண்டு வய துக்குமேல் நாற்பது வயதுவரையுள்ள பெண்”.ஆனால் இன்றும் ஒரு ஓவியம் போல் என்றும் பதினாறாய் கலகலவென்று சிரித்துக் கொண்டே இருக்கிறாள் ..
எனக்கு இதை எழுதிய சங்கத் தமிழன் இவளிடம் ஏமாந்து விட்டானோ என்று தோன்றுகிறது !
